நாய் நன்றியுள்ளது- மனிதனோடு ஒப்பிடாதீர்
ஆவடி, ராஜ்பாய் நகர், திருவள்ளூர் தெருவைச் சேர்ந்தவர் மதிவாணன்,(வயது 58) இன்ஜினியர். இவரது மனைவி நந்தினி (வயது 47) நேற்று முன்தினம் மதியம் 1:30 மணி அளவில், அவரது மனைவி வீட்டில் தனியாக இருந்தபோது, முன்பக்க கேட் வழியாக நுழைந்த 5 அடி நல்ல பாம்பு ஒன்று வீட்டுக்குள் நுழைய முயன்றது.
அப்போது வீட்டில் இருந்த சிப்பி பாறை மற்றும் பாக்சர் ரக நாய்கள், வீட்டின் உரிமையாளரை காப்பாற்ற, பாம்பிடம் சண்டையிட்டு வீட்டுக்குள் செல்ல விடாமல் தடுத்தது. இதில் பாக்சர் ரக நாயை பாம்பு சீண்டிய நிலையில், தொடர்ந்து பாம்பிடம் போராடியது. அதை கண்டு அதிர்ச்சி அடைந்த நந்தினி வனப்பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.
என்ன கொடுமை சார் இது?…. ‘சந்திரமுகி 2’ விமர்சனம்!
தகவலறிந்த ஆவடி பல்லுயிர் பாதுகாப்பு மேலாண்மை இயக்குனர் ரீகன், சிப்பி பாறை நாயை காப்பாற்றி, நல்ல பாம்பை பத்திரமாக மீட்டு, வனத்துறையினர் அறிவுறுத்தலின்படி வெங்கல் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
பாம்பிடம் சண்டையிட்ட பாக்சர் ரக நாய், பாம்பு சீண்டியதில் ஒரு மணி நேரத்தில் உடலில் விஷமேறி பரிதாபமாக உயிரிழந்தது. அதன் அருகே சென்று படுத்து கொண்ட ‘சிப்பி பாறை’ நாய், நண்பனை இழந்த துயரம் தாங்காமல் கண்ணீர் வடித்தது காண்போர் நெஞ்சை உருக செய்தது.
நன்றி உணர்வுக்கு சான்றாக அமைந்த பாக்சர் நாயின் செயலை கண்டு அக்கம்பக்கத்தினர் வியந்தனர்.