நாடு முழுவதும் வணிகப் பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 203 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று (அக்.01) முதல் அமலுக்கு வருவதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
குன்னூர் பேருந்து விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்- மு.க.ஸ்டாலின்
அதன்படி, சென்னையில் 19 கிலோ எடைக் கொண்ட வணிகப் பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 203 உயர்ந்து ரூபாய் 1,898- க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வணிகப் பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், மீண்டும் உயர்ந்திருப்பது உணவகங்கள், பேக்கரி, கேட்டரிங் ஆகிய தொழில் செய்வோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து- 8 பேர் பலி
எனினும், சென்னையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலைத் தொடர்ந்து ரூபாய் 918.50- க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.