Homeசெய்திகள்தமிழ்நாடுஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு!

ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு!

-

 

"தமிழகத்தில் விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக முன் அனுமதி பெற வேண்டும்"- தமிழக அரசு அறிவிப்பு!
Photo: TN Govt

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது.

காந்தி நினைவிடத்தில் குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முதலமைச்சர், மதுவிலக்கு அமலாக்கப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய், இ.கா.ப., சென்னை தெற்கு மத்திய நுண்ணறிவுப் பிரிவுக் காவல் துணைக் கண்காணிப்பாளர் காசிவிஸ்வநாதன், செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் முனியசாமி, மதுரை மண்டலம் மத்திய நுண்ணறிவுப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் பாண்டியன், ராணிப்பேட்டை காவல் நிலையத்தின் அயல்பணி மத்திய நுண்ணறிவுப் பிரிவின் தலைமைக் காவலர் ரங்கநாதன் ஆகியோருக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்க உத்தரவிட்டுள்ளார்.

குன்னூர் பேருந்து விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்- பிரதமர் மோடி

இவ்விருது, முதலமைச்சரால் 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் நாள், குடியரசு தினத்தன்று வழங்கப்படும். இவ்விருதுடன், பரிசுத் தொகையாக ரூபாய் 40,000 ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ