
சேலம் மாவட்டம், சூரமங்கலம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை என்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகுவதாக அறிவித்தது ஒட்டுமொத்த தொண்டர்களின் முடிவு ஆகும்.
தனித்து நின்று நாங்கள் மீண்டும் வெல்வோம் – அமைச்சர் ரோஜா பேட்டி
மாநிலத்தின் உரிமையைக் காக்க நாடாளுமன்றத் தேர்தலை அ.தி.மு.க. சந்திக்கும். ஒடிஷா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பிரதமர் வேட்பாளரை அறிவித்த பிறகா தேர்தலைச் சந்திக்கின்றனர்? ஆட்சிக்கு வர தமிழக மக்களிடம் பொய் வாக்குறுதி தந்தது தி.மு.க. பூத் கமிட்டி எந்த அளவுக்கு வலிமையாக உள்ளதோ அந்த அளவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும்.
ராஜஸ்தானை காங்கிரஸ் ஆட்சி அழித்துவிட்டது- பிரதமர் மோடி
பூத் கமிட்டி உறுப்பினர்கள் இந்த பணிகளை சிறப்பாக செயல்படுத்தினால் நமது வேட்பாளர்கள் எளிதாக வெற்றி பெற முடியும். தேர்தல் வந்தால் அழகாகப் பேசி ஏமாற்றும் அனைத்து தந்திரங்களையும் தி.மு.க.வினர் முன்னெடுப்பர். தி.மு.க.விற்கு வாக்களித்துவிட்டு வேதனையில் உள்ளனர் தமிழக மக்கள். தேனீ போல் சுறுசுறுப்பாக செயல்பட்டு அ.தி.மு.க.வுக்கு கிடைக்கக் கூடிய வாக்குகளை சிந்தாமல், சிதறாமல் கிடைக்கச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.