Homeசெய்திகள்ஆவடிஆவடியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புவாசிகள் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்

ஆவடியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புவாசிகள் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்

-

- Advertisement -

ஆவடியில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பேருந்து நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் குடியிருப்பு கட்டி வரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதிவாசிகள் மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

சென்னை அடுத்த ஆவடியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில், 116 ஏக்கர் பரப்பளவில், 1993ல் வீட்டுமனைகள் உருவாக்கப்பட்டது. இதில், இரண்டு செக்டரில் சேர்த்து 4,000 குடியிருப்புகள் உள்ளன. இந்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மனைப்பிரிவில், விளையாட்டு திடல், மகளிர் மேம்பாட்டிற்கான இடம், நியாய விலைக்கடை உள்ளிட்டவை மக்கள் பயன்பாட்டிற்கு ஒதுக்கவில்லை. பேருந்து நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், 43 மனைகளும் 2 கடைகளும் உருவாக்கி விற்பனை செய்ய தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் டெண்டர் கோரப்பட்டதுடன், அதற்கான பணிகளையும் செய்து வருகிறது. இது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு இடம் வாங்கிய போது, பேருந்து நிலையம் வரும் என்று கூறிய இடத்தை, வீட்டு வசதி வாரிய குடியிருப்பாக மாற்றும் முடிவுக்கு அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். பல்வேறு வகையில் எதிர்ப்புகள் தெரிவித்த நிலையில், இன்று மனித சங்கிலி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஆவடியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புவாசிகள் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் கூறுகையில், வீட்டு வசதி வாரிய நிர்வாகம், தற்போது வெளியிட்டுள்ள ஒப்பந்த புள்ளி டெண்டரை, உடனடியாக ரத்து செய்து, அந்தந்த துறையிடம் நிலத்தை ஒப்படைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தமிழ்நாடு அரசினுடைய வீட்டு வசதி வாரியம் தனியார் ரியல் எஸ்டேட் கம்பெனி கிடையாது. இது மக்களுக்கானது எனக் கூறியிருந்தார். பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பேருந்து நிலையமோ அல்லது தொகுதிக்கு ஒரு விளையாட்டு மைதானம் திட்டத்தின் கீழ் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் பயன்படுத்தக்கூடிய விளையாட்டு திடலையோ உருவாக்க வேண்டும் என கோரிக்கையையும் முன் வைத்துள்ளனர்.

MUST READ