சிக்கிம் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போன, 100- க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குடும்ப அட்டை – மத்திய அரசின் மறைமுக உத்தரவு!
வடக்கு சிக்கிம் பகுதியில் மேக வெடிப்பால் கொட்டித் தீர்த்த கனமழையால் டீஸ்தா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாக்யோங், நம்ச்சி, காங்டாக், மங்கன் ஆகிய நான்கு மாவட்டங்களில் வெள்ள நீர் புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளப்பெருக்கால் டீஸ்தா நதி பாயும் வழியில் 11 பாலங்கள் சேதமடைந்ததால் போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் பலரும் அடித்துச் செல்லப்பட்டனர். உயிரிழந்த 14 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன 100- க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 22,000- க்கும் மேற்பட்டோரில் 2,000 பேர் வரை மீட்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
“ஹெக்டேருக்கு ரூபாய் 13,500 இழப்பீடு வழங்கப்படும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
கனமழையால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, 26 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. கூடுதல் ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிக்கிம் மாநில அரசு தெரிவித்துள்ளது.