Homeசெய்திகள்சென்னைதிருமணமாகி 22 நாட்களில் 80 சவரன் நகையுடன் புது பெண் மாயம்

திருமணமாகி 22 நாட்களில் 80 சவரன் நகையுடன் புது பெண் மாயம்

-

- Advertisement -

திருமணமாகி 22 நாட்களில் 80 சவரன் நகையுடன் புது பெண் மாயம்

தாம்பரத்தில் திருமணமாகி 22 நாட்களில் 80 சவரன் நகையுடன் புது பெண் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Read all Latest Updates on and about நகை மாயம்

மேற்கு தாம்பரத்தை சேர்ந்த 26 வயது ஐ.டி பணியாளர் உறவினர்கள் மூலம் பெண் தேடிய நிலையில், அவருக்கும் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே சென்ன குப்பம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் எம்.காம் முதலாமாண்டு படித்துவந்தவர் ஆர்த்தி(22) க்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு கடந்த மாதம் 9-ம் தேதி ஒரகடத்தில் உள்ள திருமேனி அகடமியில் தடல்புடலாக நடந்துள்ளது.

3500 பேருக்கு மாப்பிள்ளை வீட்டார் பிரியாணி விருந்து அளிக்க பெண் வீட்டாரும் பெண்ணுக்கு 80 சவரன் நகை போட்டு திருமணம் மணப் பெண்ணை மாப்பிள்ளை விட்டிற்கு அனுப்பியுள்ளனர், 22 நாட்கள் திருமண ஜோடிகள் ஒன்றாக வாழ்ந்த நிலை கடந்த 3ம் தேதி சேலையூர் அருகே உள்ள தன் படிக்கும் தனியார் கல்லூரிக்கு செல்வதாக ஆர்த்தி சென்றுள்ளார், ஆனால் மாலை வீடு திரும்பவில்லை, அவரின் செல்போனும் அனைக்கப்பட்டு இருந்தது . இதனால் மாப்பிள்ளை வீட்டில் பார்த்தபோது நகைகளும் காணமல் போகவே தாம்பரம் காவல் நிலையத்தில் 80 சவரன் நகையுடன் மனைவி காணவில்லை என புகார் அளித்தார். இதையடுத்து தாம்பரம் காவல் துறையினர் புதுமண பெண் காணவில்லை என வழக்கு பதிவு செய்து அவரின் புகைப்படத்துடன் அங்க அடையாளங்களை மற்ற காவல் நிலையங்களுக்கு அனுப்பி விசாரணையை துவக்கினார்கள்.

5 வாலிபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை | Police intensively investigates 5  teenagers

அப்போது காணாமல் போன புதுமணப்பெண்ணுக்கு திருமணத்திற்கு முன்பாக சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஆகாஷ் என்பவருடன் பழக்கம் இருந்தது பெண் வீட்டார் மூலம் தெரிய வந்துள்ளது, இதனையடுத்து ஆகாஷின் செல்போனில் தொடர்பு கொண்டபோது அந்த போனும் அனைக்கப்பட்டு இருந்ததால் இருவரும் ஒன்றாக சென்று இருக்கலாம் என்கிற கோணத்தில் அவர்களை தேடிவருகிறார்கள், அதே நேரத்தில் தடபுடலாக திருமணம் செய்த மாப்பிள்ளை வீட்டார் தங்கள் சார்பாக தாலி செயின் உள்ளிட்ட நகைகளை பெண்ணுக்கு திருமணத்தின் போது அணிவித்துள்ளனர், மேலும் பல லட்சங்கள் செலவு செய்து திருமணமும் நடத்திய நிலையில் புதுமணப் பெண் நகைகளுடன் மாயமானது குடும்பத்தில் பெரும் மனவருத்ததை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ