Homeசெய்திகள்இந்தியா"ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றமில்லை"- ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!

“ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றமில்லை”- ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!

-

 

"ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றமில்லை"- ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!
Photo: RBI

வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டியில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யவில்லை.

சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை!

ரிசர்வ் வங்கியின் கடன் கொள்கைக் கூட்டம், மும்பையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் பேசிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், “ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றமில்லை; குறைந்த கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாகவே தொடரும். நடப்பு நிதியாண்டில் நான்காவது முறையாக ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆகவே நீடிக்கிறது.

பண்டிகை காலங்கள் தொடங்கியுள்ளதால் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைத் தொடரும். நாட்டில் பண வீக்கத்தை 4%- க்குள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த இருவர் மின்சாரம் பாய்ந்து பலி

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம், தொடர்ந்து பழைய அளவிலே நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ