ஆசிய விளையாட்டில் ஆடவர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது.
“தமிழகத்தில் அ.தி.மு.க. தான் பிரதான எதிர்க்கட்சி”- அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி பதில்!
19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனா நாட்டின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள இந்திய வீரர், வீராங்கனைகள் வில்வித்தை, தடகளம், நீச்சல், பாய்மரப்படகு உள்ளிட்டப் போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஆசிய விளையாட்டு ஹாக்கி ஆடவர் பிரிவில் இறுதிப் போட்டியில், ஜப்பான் அணியை இந்திய அணி இன்று (அக்.06) எதிர்கொண்டது. இதில், 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தி, இந்திய தங்கப்பதக்கத்தை வென்றது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் தொடருக்கு இந்திய ஹாக்கி ஆடவர் அணி நேரடியாகத் தேர்வானது.
ஆளுநர் முடிவெடுக்காத நிலையில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியா 22 தங்கம், 33 வெள்ளி, 36 வெண்கலம் என 91 பதக்கங்களை வென்றுள்ளது.
இதனிடையே, இந்திய கிரிக்கெட் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.