இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
இஸ்ரேல் நாட்டின் காஸா உள்ளிட்ட பல பகுதிகளில் 5,000 ராக்கெட்டுகள் மூலம் ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ‘ஆப்ரேஷன் அல் அக்ஸா ஃபிளட்’ என்ற பெயரில் ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
காஸாவில் ஹமாஸ் குழுவினர் பதுங்கியிருந்த இடங்களில், ‘ஆபரேஷன் ஐயன் ஸ்வோர்ட் (Operation Iron Sword) இஸ்ரேல் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களால் மேற்கு கரையில் போர் பதற்றம் நிலவுகிறது.
“சிறையில் நஞ்சு வைத்து இம்ரான் கான் கொல்லப்படலாம்”- வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி!
இதனால் இஸ்ரேலுடன் பிற நாடுகளை இணைக்கும் சர்வதேச சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவதாக ஹமாஸ் போர் பிரகடனம். தற்போதைய நிலையில், காஸாவை நோக்கி இஸ்ரேல் ராணுவப் படை முன்னேறி வரும் நிலையில், இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற ஹமாஸ் குழுவினர் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது.
காஸாவைக் குறி வைத்து கடும் தாக்குதல்!
இந்த நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தனியாக இருப்பதைத் தவிர்த்து பாதுகாப்பு முகாம்களில் தங்க வேண்டும். உள்ளூர் நிர்வாகம் வெளியிடும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அவசர உதவி தேவைப்படும் இந்தியர்கள், இந்திய தூதரக அதிகாரிகளைத் தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.