Homeசெய்திகள்தமிழ்நாடு'மேட்டூர் அணையில் இருந்து பாசன நீர் திறப்பு நாளை முதல் நிறுத்தப்படும்' என அறிவிப்பு!

‘மேட்டூர் அணையில் இருந்து பாசன நீர் திறப்பு நாளை முதல் நிறுத்தப்படும்’ என அறிவிப்பு!

-

- Advertisement -

 

இரண்டு ஆண்டுகளுக்கு பின் நீர்மட்டம் 80 அடிக்கும் கீழ் சரிந்தது!
Photo: Mettur Dam

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காகத் திறந்து விடப்படும் தண்ணீர் நாளை (அக்.08) முதல் முற்றிலும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டி- இந்தியா சாதனை!

கடந்த ஜூன் மாதம் 12- ஆம் தேதி அன்று சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து சம்பா தாளடி குறுவை சாகுபடிக்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். இந்த நிலையில், ஜூன் முதல் செப்டம்பர் மாதங்கள் வரை போதிய மழை இல்லாததாலும், காவிரியில் இருந்து திறந்துவிட வேண்டிய தண்ணீரைத் திறக்க கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்ததாலும், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்தது. எனினும், டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு அதிகமாக இருந்தது.

இதனால் மேட்டூர் அணியின் நீர்மட்டம் படிப்படியாகச் சரிந்து வந்தது. சுமார் 41 ஆண்டுகளுக்கு பிறகு 35 அடிக்கும் கீழ் அணையின் நீர்மட்டம் சரிந்துள்ளது. தற்போது அணைக்கு நீர்வரத்து 130 கனஅடியாக உள்ள நிலையில், டெல்டா பாசனத்திற்காகத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 3,000 கனஅடியில் இருந்து 2,300 கனஅடியாக இன்று குறைக்கப்பட்டுள்ளது.

“இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்”- இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்!

இந்த சூழலில், அணையில் நீர்மட்டம் தற்போது 32 அடிக்கும் கீழ் குறைந்ததால் நாளை (அக்.08) முதல் டெல்டா பாசனத்திற்காகத் திறக்கப்படும் தண்ணீரை முழுவதுமாக நிறுத்தப்படவுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மேட்டூர் அணை தண்ணீரை நம்பியுள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

MUST READ