இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியதில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். பதிலுக்கு பாலஸ்தீனியர்கள் அதிகம் வசிக்கும் காசா பகுதி மீது இஸ்ரேல் குண்டு மழை பொழியும் நிலையில், மக்கள் பதுங்கும் குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
‘ஆப்ரேஷன் அல் அக்ஸா ஃபிளட்’ என்ற பெயரில் ஐந்தாயிரம் ராக்கெட்டுகளைக் கொண்டு, தாக்கியதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர், இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்ததன் மூலம் ஹமாஸ் பெரும் தவறை இழைத்து விட்டது எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து இஸ்ரேல் பதில் தாக்குதல் தொடங்கியதால் காசா பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. காசா பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு எதிராகவும், தங்கள் வழிபாட்டு தலமான அல் அக்ஸா மீது ஆதிக்கத்தைச் செலுத்தி வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
“இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்”- இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்!
இஸ்ரேல் உடனான உறவை அனைத்து அரபு நாடுகளும் துண்டித்துக் கொள்ள வேண்டும் எனவும், ஹமாஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மேலும், இஸ்ரேலின் அடக்குமுறைகளைப் பொறுத்தது போதும் என்ற மனநிலைக்கு பாலஸ்தீன மக்கள் வந்துள்ளதாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஹமாஸுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ள அந்நாட்டு பிரதமர், தங்கள் மீது தாக்குதலைத் தொடுத்துள்ள எதிரிகள், இதுவரை இல்லாத வகையில், மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
காஸாவைக் குறி வைத்து கடும் தாக்குதல்!
இஸ்ரேல் ராணுவத்தினர், நாட்டின் தெற்கு பகுதிக்கு விரைந்துள்ளதாகவும் தங்கள் மக்களைக் காக்கும் போரில், வெற்றி பெறுவோம் எனவும் தெரிவித்துள்ளார் .
இதற்கிடையே, காசா பகுதியில் இஸ்ரேல் குண்டு மழை பொழிவதால், மக்கள் பதுங்கும் குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.