Homeசெய்திகள்விளையாட்டு"அவர் இந்த போட்டியில் விளையாட வேண்டும் என நினைக்கவில்லை"- கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி!

“அவர் இந்த போட்டியில் விளையாட வேண்டும் என நினைக்கவில்லை”- கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி!

-

 

"அவர் இந்த போட்டியில் விளையாட வேண்டும் என நினைக்கவில்லை"- கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி!
File Photo

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் இன்று (அக்.08) மதியம் 02.00 மணிக்கு நடைபெறவுள்ள உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான லீக் போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன.

‘பட்டாசுக் கடையில் நிகழ்ந்த தீ விபத்தில் 13 பேர் உயிரிழப்பு’- தமிழகம், கர்நாடகா அரசுகள் நிவாரணம் அறிவிப்பு!

நடப்பு 50 ஓவர் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த அக்.05- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தனது முதல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியை இன்று (அக்.08) எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், கிரிக்கெட் போட்டி தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்து, போட்டியில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை களமிறக்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.

தனியார் கல்லூரி மாணவர்கள் பயணித்த பேருந்தில் தீ!

மேலும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சுப்மன் கில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட வேண்டும் என நினைக்கவில்லை. சுப்மன் கில் 100% உடற்தகுதியுடன் இல்லை என்றும், அவர் குணமடைய வேண்டும் என்று சக மனிதராக தான் விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ