ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் தங்க நகைகள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“பட்டாசு ஆலை உயிரிழப்பு- தலா ரூபாய் 3 லட்சம் நிதி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் வீட்டில் நடைபெறும் சோதனையில், வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் 10 கோடி ரூபாய்க்கு மேல் கணக்கில் காட்டாத பணத்தை வருமானத் துறையினர் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெகதரட்சகனுக்கு சொந்தமான 50- க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த அக்டோபர் 05- ஆம் தேதி முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. எனினும், அவரது உறவினர்களுக்கு சொந்தமான 10- க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த சோதனை மூன்றாவது நாளில் நிறைவுப் பெற்றது.
அடையாறில் உள்ள ஜெகரட்சகனின் இல்லத்தில் நடந்த சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக தகவல் கூறுகின்றன. அவரது வீட்டில் நடத்தப்பட்ட ஐந்தாவது நாள் சோதனையில் கைப்பற்றப்பட்ட இரண்டு கருப்பு நிறப்பைகளில் வெளிநாட்டு கரன்சிகள், ஆவணங்கள், பணம், தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.
“கூட்டணிக்காக தி.மு.க. நாடகமாடுகிறது”- அண்ணாமலை குற்றச்சாட்டு!
அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகன் வீட்டிற்கு வந்த புலனாய்வு ஆணையர், ஜெகத்ரட்சகனின் மகள், மருமகனிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணை ஒன்பது மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது.
சவீதா குழுமம் தொடர்பான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 27 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 18 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.