Homeசெய்திகள்ஆவடிஆட்டோ ஓட்டுனர் வெட்டி கொலை-போலீசார் பல கோணங்களில் விசாரணை

ஆட்டோ ஓட்டுனர் வெட்டி கொலை-போலீசார் பல கோணங்களில் விசாரணை

-

- Advertisement -

ஆவடி அடுத்த அம்பத்தூர் அருகே ஆட்டோ ஓட்டுனர் வீடு புகுந்து வெட்டி கொலை.

ஆட்டோ ஓட்டுனர் வெட்டி கொலை-போலீசார் பல கோணங்களில் விசாரணை
மேக்ஸ்வெல்

ஆவடி அடுத்த அம்பத்தூர் சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் மேக்ஸ்வெல் வயது 53.ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். நேற்று மாலை இவரது வீட்டில் யாரும் இல்லாத பொழுது இவர் மட்டும் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.அப்போது திடீரென்று பட்டா கத்தியுடன் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ஆட்டோ ஓட்டுனரை தலை,மற்றும் கழுத்து ஆகிய இடங்களில் வெட்டி கொலை செய்துவிட்டு, அங்கிருந்து கொலை குற்றவாளிகள் அவர்கள் எடுத்து வந்த இருசக்கர வாகனங்களில் தப்பி சென்றனர்.

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் கொலை செய்யப்பட்டு கிடந்த ஆட்டோ ஓட்டுநரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் விசாரணையில் மேக்ஸ்வெல்லின் மூத்த மகன் மோசஸ் கடந்த ஆண்டு இதே பகுதியில் உதயா என்பவரை கொலை செய்த வழக்கில் அம்பத்தூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு  உள்ளதாகவும், இவர் சிறைக்குச் சென்று திரும்பி வந்ததாகவும் கூறப்படுகிறது.தற்போது மோசஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்ற நிலையில்,இந்தக் கொலை மோசஸ் மீதான முன் விரோத காரணமாக நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் அம்பத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

தனியாக இருந்த கணவனை சரமாரியாக வெட்டியதை கண்ட மனைவியின் கதறல் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.வீடு புகுந்து ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்த சம்பவம் அந்த பகுதிகள் பெறும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை அம்பத்தூர் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

MUST READ