Homeசெய்திகள்தமிழ்நாடு"சுங்கச்சாவடிகள் வேண்டாம் என மத்திய அரசுக்கு கடிதம்"- சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்!

“சுங்கச்சாவடிகள் வேண்டாம் என மத்திய அரசுக்கு கடிதம்”- சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்!

-

 

"சுங்கச்சாவடிகள் வேண்டாம் என மத்திய அரசுக்கு கடிதம்"- சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்!
Photo: TN Govt

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்க வேண்டாம் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து கடிதம் எழுதி வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

திருமுருகனுக்கு அமைச்சர் பதவியை வழங்க உள்ளதாக தகவல்!

சட்டப்பேரவையில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா எழுப்பிய கேள்வி பதிலளித்த தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, “தமிழக சாலைகள் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்க வேண்டாம்; சுங்கச்சாவடிகள் தேவையில்லை என்று மத்திய அரசுக்கு தொடர்ந்து தமிழக அரசு கடிதம் எழுதி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் அழைத்த இஸ்ரேல் பிரதமர்!

மாநில நெடுஞ்சாலையை சற்றே அகலமாக்கி தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுகின்றனர். நான்கு வழிச்சாலை அமைத்தாலும் மாநில நெடுஞ்சாலைகளில் நாங்கள் சுங்கச்சாவடி அமைப்பதில்லை” எனத் தெரிவித்தார்.

MUST READ