போர் பதற்றம் காரணமாக, டிசிஎஸ், விப்ரோ போன்ற நிறுவனங்கள் பிற நாடுகளுக்கு செல்ல முடிவெடுத்துள்ள நிலையில், அங்கு பணியில் இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர ‘ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை- மெட்ரோ கொடுத்த அசத்தல் ஆஃபர்!
அந்த வகையில், இஸ்ரேலில் இருந்து முதற்கட்டமாக, 212 இந்தியர்களுடன் சிறப்பு விமானம் புறப்பட்டு, டெல்லி வந்தடைந்தது. டெல்லி விமான நிலையத்தில் இந்தியர்களை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், நேரில் வரவேற்றார். சிறப்பு விமானத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 21 பேரும் தாயகம் திரும்பியுள்ளனர். தொடர்ந்து, இஸ்ரேலில் இருந்து வெளியேற விரும்பும் இந்தியர்கள், சிறப்பு விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என மத்திய வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
“அனைத்துத் துறைகளிலும் கவனம் செலுத்துகிறோம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
இந்த நிலையில், இஸ்ரேல் நாட்டில் தற்போது இயங்கி வரும் டிசிஎஸ், விப்ரோ போன்ற நிறுவனங்களும் தங்களுடைய வர்த்தகத்தை இந்தியாவுக்கோ அல்லது பிற நாடுகளுக்கோ மாற்றவுள்ளனர். இஸ்ரேல் நாட்டின் இன்டெல், மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற 500- க்கும் அதிகமான எம்என்சி நிறுவனங்களில் சுமார் ஒரு லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.