காய்ச்சலில் இருந்து மீண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில், தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்.
பிரபல நகைக்கடை உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வீரர்கள் விளையாட சென்னை வந்திருந்த போது, ஷுப்மன் கில்லுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில், மருத்துவக் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
இதனால் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஷுப்மன் கில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், ஷுப்மன் கில் சென்னையிலேயே தங்கிச் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த சூழலில், சென்னையில் இருந்து விமானம் மூலமாக ஷுப்மன் கில் அகமதாபாத் புரட்டுச் சென்றார்.
அங்கு நாளை (அக்.14) இந்தியா- பாகிஸ்தான் போட்டி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஷுப்மன் கில் நீண்ட நேரம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சென்னை திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்தவர்களை வரவேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
எனினும், அவரது உடல்நிலையை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருவதாகவும், போட்டிக்கு முன்பாக பரிசோதனையின் முடிவிலேயே, அவர் அணியில் இணைவாரா? அல்லது ஓய்வெடுக்க உள்ளாரா? என்பது தெரிய வரும் எனக் கூறப்படுகிறது.