கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள 8 காவல் நிலையங்களைத் தாக்க மாவோயிஸ்ட்டுகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து தமிழகம் மற்றும் கேரளா எல்லையில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
212 இந்தியர்களுடன் தாயகம் திரும்பிய சிறப்பு விமானம்!
கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாவோயிஸ்ட்டுகள் தேயிலைத் தொழிலாளர்களைச் சந்தித்து அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அடுத்தக் கட்ட நடவடிக்கையாக கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள எட்டு காவல் நிலையங்களை தாக்க மாவோயிஸ்ட்டுகள் முடிவுச் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோழிக்கோடு, வளையம், தொட்டில்பாலம் உள்ளிட்ட 8 காவல் நிலையங்களில் மாவோயிஸ்ட்டுகள் குறி வைத்துள்ளதாக உளவுத்துறை அளித்த தகவலையடுத்து, அங்கு 256 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஷுப்மன் கில்!
தமிழகம் வனப்பகுதிகள் வழியாகவும் மாவோயிஸ்ட்டுகள் ஊடுருவி தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை கூறிய நிலையில், இரு மாநில வனப்பகுதிகளிலும் பலப்படுத்தப்பட்டிருக்கிறது.