Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

-

- Advertisement -

 

காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை.... மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
File Photo

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் அக்டோபர் 20- ஆம் தேதி வரை நீட்டித்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு!

சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறையினரால், கடந்த ஜூன் 14- ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுச் செய்யப்பட்டார். அவருக்கு எதிராக, கடந்த ஆகஸ்ட் 12- ஆம் தேதி 3,000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறையினர், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல், நேற்றுடன் (அக்.13) நிறைவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலமாக, அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் அக்டோபர் 20- ஆம் தேதி வரை நீட்டித்து, நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

சென்னை வந்த சோனியா காந்தி, பிரியங்கா காந்தி….உற்சாகமாக வரவேற்பு அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் எட்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜாமீன் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனு வரும் அக்டோபர் 16- ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

MUST READ