Homeசெய்திகள்தமிழ்நாடுஓலா, உபர் உள்ளிட்ட வாகனங்கள் ஸ்டிரைக்!

ஓலா, உபர் உள்ளிட்ட வாகனங்கள் ஸ்டிரைக்!

-

- Advertisement -

 

ஓலா, உபர் உள்ளிட்ட வாகனங்கள் ஸ்டிரைக்!
File Photo

ஆட்டோக்களைப் போல கால் டேக்சிகளுக்கும் அரசே வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து, சென்னையில் ஓலா, உபர் உள்ளிட்ட வாடகை வாகன ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர்.

குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழா தொடங்கியது!

ஓலா, உபர், ராபிடோ, போர்டர் போன்ற செயலிகளைப் போல தமிழக அரசே வாடகை வாகன செயலியை உருவாக்க வேண்டும் என ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்வது போல, கால் டேக்சிகளுக்கும், டாடா ஏஸ் வாகனங்களுக்கும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகன டேக்சி சேவையும் தடைச் செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. போர்டர் செயலியில் இயங்கும் சரக்கு வாகனங்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

5 கிராம் குட்கா வைத்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு!

14 சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவுத் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தால் சென்னையில் 80% வாடகை வாகனங்கள் இயங்காது எனக் கூறப்பட்டுள்ளது.

MUST READ