Homeசெய்திகள்உலகம்டெல் அவிவ், ஜெருசலேமில் ஏவுகணை தாக்குதல் முயற்சி!

டெல் அவிவ், ஜெருசலேமில் ஏவுகணை தாக்குதல் முயற்சி!

-

- Advertisement -

 

காசா பகுதியில் இஸ்ரேல் குண்டு மழை- மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம்!
File Photo

இஸ்ரேல் படைகள் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளதோடு, ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் தாக்குதலை எதிர்க்கொண்டு ஏவுகணைகளை இடைமறித்து அழித்து வருகிறது.

“40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் வெல்ல பணியாற்றுக”- தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி மடல்!

இஸ்ரேலுக்கு புகுந்து தாக்குதலைத் தொடங்கிய ஹமாஸ் படையினர், பலரையும் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். இதையடுத்து, காசா மீது மழைபோல் ஏவுகணைளை வீசி இஸ்ரேல் தாக்கல் நடத்தி வருகிறது. இதில், காசாவில் இருந்த பெரும்பாலான கட்டிடங்கள் தரைமட்டமான நிலையில், குடிநீர் மின் இணைப்பு இன்றி, இருளில் மூழ்கியது.

அதே நேரம், ஹமாஸ் படையினரும் தாக்குதலைத் தீவிரப்படுத்தவில்லை. இந்த நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமில் ஏவுகணை தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலிப்பான் ஒலி எழுப்பியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. டெல் அவிவ் மீது ஹமாஸ் படையினர், மூன்று முறை ஏவுகணைகளை வீசியதாகவும், அதனை அயர்ன் டோம் அமைப்பு இடைமறித்து அழித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

தி.மு.க.வின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம்!

எனினும், ஒரு ஏவுகணை தாக்குதலில் வீடு ஒன்று சேதமானதாகவும், அங்கு யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது.

MUST READ