இஸ்ரேலில் புகுந்து தாக்குதல் நடத்திய போது, பிடித்து வரப்பட்ட பிணைக்கைதியின் காணொளியை ஹமாஸ் படையினர் வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவுடன் உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில் கனடா பிரதமர் நவராத்திரி வாழ்த்து!
காசா பிணைக்கைதிகளாக 199 பேர் வரை பிணை வைக்கப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தங்கள் பிடியில் 250 பேர் வரை இருப்பதாகவும், அவர்களில் ராணுவ அதிகாரிகளும் அடங்குவர் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், பிணைக்கைதியாகப் பிடித்து வரப்பட்ட பெண் ஒருவருவர் தோன்றும் காணொளியையும், ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. இஸ்ரேலின் சோஹம் பகுதியைச் சேர்ந்த அவர், ஒரு நிகழ்வில் பங்கேற்றிருந்த போது, தான் பிடித்து வரப்பட்டதாகவும், தன்னை விடுவிக்க வேண்டும் என கெஞ்சுவதும் அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
டெல் அவிவ், ஜெருசலேமில் ஏவுகணை தாக்குதல் முயற்சி!
மேலும், அதே பெண் கையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சைப் பெறுவது காணொளியில் இடம் பெற்றுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையும், அந்த பெண் கைது செய்யப்பட்டதை உறுதிச் செய்தது. அவரது குடும்பத்தினருடன் பேசி வருவதாகத் தெரிவித்துள்ளது. அத்துடன், தனது வயது 21 என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பிணைக்கைதிகளாக உள்ளவர்களை இஸ்ரேலிய சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிக்கப்பயன்படுத்துவோம் எனவும் ஹமாஸ் அமைப்புத் தெரிவித்துள்ளது.