‘லியோ’ திரைப்படத்தின் வெளியீட்டை வரும் அக்டோபர் 20- ஆம் தேதி நிறுத்தி வைக்க நடிகர் விஜய்க்கு இலங்கை எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
‘லியோ’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாக, இலங்கை தமிழ் எம்.பி.க்கள் செல்வம் அடைக்கலநாதன், சி.வி.விக்னேஷ்வரன் மற்றும் முன்னாள் எம்.பி.க்கள் ஆகியோர் நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளனர்.
பட்டாசு ஆலைகளில் அடுத்தடுத்து வெடி விபத்து; 14 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
அந்த கடிதத்தில், “நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு ஆதரவாக வரும் அக்டோபர் 20- ஆம் தேதி போராட்டம் நடத்தப்படவுள்ளது. போராட்டம் நடைபெறும் நாளில் லியோ திரைப்படம் வெளியானதால், அது பின்னடைவாக இருக்கும். இலங்கையில் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால், லியோ திரைப்படத்தின் வெளியீட்டை வரும் அக்டோபர் 20- ஆம் தேதி நிறுத்தி வைக்க வேண்டும்; இலங்கையில் வரும் அக்டோபர் 20- ஆம் தேதி லியோ திரைப்படத்தை திரையிட வேண்டாம்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.