சென்னை எப்.சி. அணியின் கால்பந்தாட்ட போட்டியில் கலந்து கொண்டு, நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் பதக்கம் வென்றுள்ளார்.
அஜித், மகிழ் திருமேனி கூட்டணியில் விடாமுயற்சி திரைப்படம் உருவாக இருக்கிறது. அஜித்தின் 62 வது திரைப்படமான இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. அனிருத் இதற்கு இசை அமைக்க இருக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இது சம்பந்தமான அறிவிப்புகள் கடந்த மே மாதம் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி இருந்தது. அதைத்தொடர்ந்து படம் சம்பந்தமான பல அப்டேட்டுகள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அதன்படி அஜித் இதில் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் வில்லன்களாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் த்ரிஷா நாயாகியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் விடாமுயற்சி படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
படத்தின் புதிய அப்டேட்டுகளாக, இப்படம் பரபரப்பான ஆக்சன் திரில்லர் கதை களத்தில் உருவாக இருப்பதாக தெரியவந்தது. அது மட்டும் இல்லாமல் இதன் அறுபது சதவீத படப்பிடிப்புகள் துபாயில் நடைபெற இருக்கிறது. முக்கியமான காட்சிகள் இந்தோனேசியாவில் படமாக்கப்பட இருக்கிறது.சிறிய பகுதி மட்டும் சென்னையில் படமாக்கப்படும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, அஜர்பைஜானில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அஜித் மற்றும் த்ரிஷாவின் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சென்னை எப்.சி. அணியின் கால்பந்தாட்ட போட்டியில் கலந்து கொண்டு நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் பதக்கம் வென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.