லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம், உலகம் முழுவதும் நாளை வெளியாகவுள்ளது. இந்த படத்தில் அர்ஜூன், த்ரிஷா, சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், மற்றும் திரைப்பட இயக்குநர்கள் மிக்ஷின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.
தமிழகத்தில் ‘லியோ’ திரைப்படத்திற்கான முதல் காட்சியை காலை 09.00 மணிக்கு தான் திரையிட வேண்டும்; இறுதி காட்சி நள்ளிரவு 01.30 மணிக்கு முடிக்கப்பட வேண்டும்; ஆறு நாட்களுக்கு தினமும் ஐந்து காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும்; உள்ளிட்ட அறிவிப்புகளை தமிழக அரசு வௌியிட்டுள்ளது. இருப்பினும், இது வரையிலும் படத்தை 4 மணிக்கு வெளியிடவும் தொடர்ந்து படக்குழு முயற்சித்து வருகிறது. இதனிடையே, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் உள்பட படக்குழுவினர் அனைவரும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Thalapathy Latest Video 💥😍
— Christopher Kanagaraj (@Chrissuccess) October 18, 2023