Homeசெய்திகள்சினிமாவில் ஸ்மித்துடன் விவாகரத்து இல்லை... சேர்ந்து வாழ ஜடா முடிவு...

வில் ஸ்மித்துடன் விவாகரத்து இல்லை… சேர்ந்து வாழ ஜடா முடிவு…

-

ஹாலிவுட்டில் புகழ்பெற்ற உச்ச நட்சத்திரம் வில் ஸ்மித். இவரது மனைவி ஜடா பிங்கெட். கடந்த வருடம் நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில், தனது மனைவி ஜடாவை கேலி செய்த தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை, வில் ஸ்மித் கன்னத்தில் அறைந்தார். அச்சம்பவம் தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அவர் மீது துறை ரீதியாகவும் நடவடிக்கை பாய்ந்தது. இதைத் தொடர்ந்து, அவர் பொது நிகழ்ச்சிகள் மற்றும் விருது விழாக்களில் பங்கேற்கவில்லை.

 

இதனிடையே, நடிகர் வில் ஸ்மித்தும், அவரது மனைவி ஜடா பிங்கெட்டும் கடந்த 2016-ம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்வதாக தகவல் வெளியானது. அண்மையில், ஜடா பிங்கெட் அளித்த பேட்டி ஒன்றில், 2016ம் ஆண்டில் இருந்தே இருவரும் பிரிந்து வசித்து வருவதாகத் தெரிவித்தார். இது வில் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே, பாடகர் ஆகஸ்ட் அல்சினாவை ஜடா பிங்கெட் காதலித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் வில் ஸ்மித்தும் ஜடாவும் விவாகரத்து செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்டது.

ஆனால், இந்த தகவலை வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் மறுத்துள்ளார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இது தொடர்பாக வெளிப்படையாக பேசிய அவர், தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையாக வாழ்வதற்கான வழிமுறைகளை தேடி வர முயற்சிப்பதாக தெரிவித்தார்.

MUST READ