Homeசெய்திகள்சினிமாரோகிணி திரையரங்கில் 'லியோ' வெளியாகும் - அதிரடி அறிவிப்பு

ரோகிணி திரையரங்கில் ‘லியோ’ வெளியாகும் – அதிரடி அறிவிப்பு

-

ரோகிணி திரையரங்கில் லியோ திரைப்படம் வெளியாகாது என காலை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது லியோ திரையிடப்படும் என்று மீண்டும் தெரிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் லியோ. லலித்குமார் இப்படத்தை தயாரித்து இருக்கிறார். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மிஸ்கின், அர்ஜூன், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் உலகம் முழுவதும் நாளை வெளியாக உள்ளது. படத்திற்காக 5 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில், 7 மணி காட்சிக்கு மட்டும் அனுமதி இல்லை என்று அரசு அறிவித்துள்ளது. இது தவிர, வெளியீட்டுக்கு முன்பே சர்வதேச அளவில் லியோ திரைப்படம் சாதனை படைத்து வந்தாலும், சென்னையில் முக்கிய திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்காமல் உள்ளது. படத்தின் தயாரிப்பாளருக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையே நிலையான முடிவு எட்டப்படாததால் இந்த இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.
'லியோ' படத்தின் வெளியீட்டை நிறுத்தி வைக்க நடிகர் விஜய்க்கு கடிதம்!
File Photo
இதனிடையே, ரோகிணி திரையரங்கில் முன்பதிவு இல்லை என கூறப்பட்டு வந்தது. நாளை படம் வெளியாக இருப்பதால், இன்று முன்பதிவு தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து ரோகிணி திரையரங்கம் நோக்கி படையெடுத்தனர். ஆனால், ரோகிணி திரையரங்கில் லியோ படம் திரையிடப்படாது என இன்று காலை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதனால், ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், ரோகிணி திரையரங்கில் லியோ திரையிடப்படும் என்று தற்போது திரையரங்க நிர்வாகம் பதிவிட்டுள்ளது. இருதரப்பிடையே ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

MUST READ