Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 200 உயர்வு!

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 200 உயர்வு!

-

- Advertisement -

 

gold price

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 200 விலை உயர்ந்துள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

“மகளிர் விடுதிகளைப் பதிவுச் செய்யாவிட்டால் 2 ஆண்டுகள் சிறை”- சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

இன்று (அக்.19) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 200 விலை உயர்ந்து, ரூபாய் 44,680- க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூபாய் 25 உயர்ந்து, ரூபாய் 5,585- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசு உயர்ந்து ரூபாய் 77.50- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

தங்கம், வெள்ளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக, கடந்த புரட்டாசி மாதம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 1,500- க்கு மேல் சரிந்திருந்த நிலையில், தற்போது ஐப்பசி மாதம் பிறந்திருப்பதாலும், சுப முகூர்த்தத்தினங்கள் அடுத்தடுத்து வரவிருப்பதாலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து உயரும் என்று நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

MUST READ