Homeசெய்திகள்சினிமாலியோவை கொண்டாட ட்ரோன் திருவிழா

லியோவை கொண்டாட ட்ரோன் திருவிழா

-

- Advertisement -
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம், உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் நாளை வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.
"ஆடியோ லாஞ்ச் ரத்து ஏன்?, படத்தில் ஆபாச வசனம் இடம் பெறாது"- இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேட்டி!
Video Crop Image
அதிகாலை 04.00 மணி மற்றும் 07.00 மணி காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், காலை 09.00 மணிக்கு வெளியானது ‘லியோ’. தமிழகத்தில் ‘லியோ’ திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளில் ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, தமிழகம் முழுவதும் சுமார் 900 திரையரங்குகளில் லியோ படத்தின் முதல் காட்சி வெளியானது.

இந்த நிலையில் லியோ படக்குழு, மியூசிகல் ட்ரோன் திருவிழா ஒன்றை நடத்தியிருக்கிறது. Botlabs Dynamics Team உதவியோடு, ட்ரோங்களை பறக்கவிட்டு அவற்றை ஒளிர செய்து பெருமைபடுத்தியுள்ளது. அந்த நிகழ்வை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசை அமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் உள்பட அனைவரும் கைதட்டி, விசில் அடித்து கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

MUST READ