Homeசெய்திகள்விளையாட்டுஇந்திய அணிக்கு 257 ரன்கள் இலக்கு!

இந்திய அணிக்கு 257 ரன்கள் இலக்கு!

-

 

இந்திய அணிக்கு 257 ரன்கள் இலக்கு!
Photo: BCCI

உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு 257 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வைரமுத்துவின் ‘மகாகவிதை’ அறிவுப்போட்டி!

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் இன்று (அக்.19) பிற்பகல் 02.00 மணிக்கு நடைபெற்ற உலகக்கோப்பைக் கிரிக்கெட் லீக் போட்டியில், இந்திய அணி, வங்கதேசம் அணியை எதிர்கொண்டது.

முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்களை எடுத்தது. வங்கதேசம் அணி தரப்பில் அதிகபட்சமாக தாஸ் 66 ரன்களையும், ஹசன் 51 ரன்களையும், மெகமதுல்லா 46 ரன்களையும் குவித்தனர்.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா, பும்ரா, சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதைத் தொடர்ந்து, 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி.

MUST READ