Homeசெய்திகள்தமிழ்நாடுமேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்!

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்!

-

- Advertisement -

 

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்!
File photo

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் (வயது 82) உடல் நலக்குறைவால் காலமானார். நெஞ்சு சளி காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளார் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

ஆதிபராசக்தி தொண்டு மருத்துவக் கல்வி, கலாச்சார அறக்கட்டளையின் தலைவராக இருந்தார் பங்காரு அடிகளார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்த பீட கோயில் கருவறையில் பெண்கள் பூஜை செய்யும் வழக்கத்தைத் தொடங்கியவர். பங்காரு அடிகளார் சேவையைப் பாராட்டி கடந்த 2019- ஆம் ஆண்டு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருதை வழங்கியது.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் பக்தர்களால் ‘அம்மா’ என அழைக்கப்பட்டவர் பங்காரு அடிகளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வைரமுத்துவின் ‘மகாகவிதை’ அறிவுப்போட்டி!

பங்காரு அடிகளாரின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

MUST READ