Homeசெய்திகள்சினிமாவிஷால் கூறிய புகார்... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஒன்றிய அரசு...

விஷால் கூறிய புகார்… அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஒன்றிய அரசு…

-

- Advertisement -
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். நடிகராக மட்டுமன்றி தயாரிப்பளர் சங்க தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இதுமட்டுமன்றி தமிழ் சினிமாவில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். மேலும், தமிழ் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்தும் வருகிறார். இந்நிலையில், அண்மையில் அவரது நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஆதிக் ரவிச்சந்திரன் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்டம் தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

அதே சமயம், இந்தியில் படத்தை வெளியிட சென்சார் சான்றிதழ் வாங்க விஷால் மும்பை சென்றிருந்தார். அங்கு சென்சார் அலுவலகத்தில் விண்ணப்பித்த போது, அங்கு உள்ள அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக விஷால் குற்றம் சாட்டியிருந்தார். இதை கண்டித்த நடிகர் விஷால், பிரதமர் மற்றும் மராட்டிய மாநில முதல்வர்களை டேக் செய்து வீடியோ வெளியிட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். அதைத் தொடர்ந்து, தமிழ் படங்களை இந்தி மொழியில் வெளியிட சென்சார் வாங்கும் முறையில் ஒன்றிய அரசு அதிரடி மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. அதன்படி, இனிமேல், இந்தியில் தமிழ் படத்தை வெளியிட சென்சார் சான்றிதழ் வாங்க மும்பை வரவேண்டிய அவசியமில்லை என்றும், தமிழகத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ