Homeசெய்திகள்தமிழ்நாடுமதுரையில் இருந்து சென்னை செல்லவிருந்த 3 விமானங்கள் ரத்து!

மதுரையில் இருந்து சென்னை செல்லவிருந்த 3 விமானங்கள் ரத்து!

-

- Advertisement -

 

மதுரையில் இருந்து சென்னை செல்லவிருந்த 3 விமானங்கள் ரத்து!
File Photo

மதுரையில் இருந்து சென்னை செல்லவிருந்த மூன்று விமானங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ரத்துச் செய்யப்பட்டன.

அவதூறு வழக்கிற்கு பதிலளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவு!

நேற்று (அக்.19) மாலை 05.00 மணிக்கு மதுரையில் இருந்து சென்னை செல்லவிருந்த இண்டிகோ விமானமும், இரவு 08.15 மணிக்கு புறப்பட வேண்டிய இண்டிகோ விமானமும், இரவு 09.00 மணிக்கு சென்னைக்கு செல்ல வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானமும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ரத்துச் செய்யப்பட்டன. திடீரென விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.

இதனையடுத்து, விமான நிறுவனங்கள் தரப்பில் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டன. தென் மாவட்டங்களில் முக்கியமான விமான நிலையமாக திகழும் மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு 10,000- க்கும் மேற்பட்ட பயணிகள் வந்துச் செல்கின்றனர்.

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் முற்றிலும் நிறுத்தம்!

மதுரை விமான நிலையத்தில் இருந்து தினமும், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத்,மும்பை, டெல்லி, கோவா என உள்நாட்டு விமான சேவைகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல், இலங்கை, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ