Homeசெய்திகள்ஆவடி8 வது மாநகராட்சி கமிஷனராகவும், இரண்டாவது ஐ.ஏ.எஸ்., கமிஷனராகவும் ஷேக் அப்துல் ரஹமான் நேற்று முன்தினம்...

8 வது மாநகராட்சி கமிஷனராகவும், இரண்டாவது ஐ.ஏ.எஸ்., கமிஷனராகவும் ஷேக் அப்துல் ரஹமான் நேற்று முன்தினம் பதவியேற்பு

-

- Advertisement -

ஆவடி நகராட்சி, கடந்த 2019 ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் 8 வது மாநகராட்சி கமிஷனராகவும், இரண்டாவது ஐ.ஏ.எஸ்., கமிஷனராகவும் ஷேக் அப்துல் ரஹமான் நேற்று முன்தினம் பதவியேற்றார்.

இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை அக்.22 ம் தேதி துவங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் முதல் வேலையாக அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கமிஷனர் ஷேக் அப்துல் ரஹமான் நேற்று கள ஆய்வு மேற்கொண்டார்.ஆவடி மாநகராட்சியில், மாநில பேரிடர் மேலாண்மை நிதி 2023 – 24 ன் கீழ், ரூ. 3.61 கோடி மதிப்பீட்டில், 9.8 கி.மீ தூரத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

8 வது மாநகராட்சி கமிஷனராகவும், இரண்டாவது ஐ.ஏ.எஸ்., கமிஷனராகவும் ஷேக் அப்துல் ரஹமான் நேற்று முன்தினம் பதவியேற்பு இந்நிலையில், காலை 7:00 முதல் 11:00 மணி வரை நான்கு மணி நேரம், பட்டாபிராம், ஐ.ஏ.எப்.சாலை, பருத்திப்பட்டு, சரஸ்வதி நகர் உள்ளிட்ட 10 இடங்களில் நடக்கும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார்.அதன் பின் வெள்ள பாதிப்பை தடுக்க, மழைநீர் வடிகாலில் இடையிடையே விடப்பட்ட இணைப்புகளை பருவமழை துவங்கும் முன் மூன்று நாட்களில் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதிகபட்சமாக பட்டாபிராம், ஐ.ஏ.எப். சாலையில் 4 இடங்களில் வடிகால் இணைக்கும் பணிகள் முடியாமல்  உள்ளது என கூறப்படுகிறது. அதேபோல் ஆவடி மாநகராட்சியில் 77 சதவீதம் வடிகால் பணிகள் முடிந்துள்ளதாக கமிஷனர் தெரிவித்தனர்.இந்த ஆய்வின் போது, வடிகால் பணி நடக்கும் பகுதிகளில் குப்பைகளை அப்புறப்படுத்தும் முறைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின், ஆவடி மாநகராட்சிக்கு செல்லும் புதிய ராணுவ சாலையில் தடுப்பு சுவர் ஓரங்களில் உள்ள மணல் திட்டுகளை அகற்றும் பணிகளை பார்வையிட்டார்.

MUST READ