ஆற்றில் குளித்த 5 மாணவர்கள் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்த மாணவர்கள் 10 பேர் இருசக்கர வாகனத்தில் வால்பாறைக்கு சுற்றுலாச் சென்றுள்ளனர். வால்பாறையை சுற்றிப் பார்த்துவிட்டு, சோலையாறு செல்லும் வழியில் உள்ள நல்லகாத்து ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது, ஒருவர் நீரில் மூழ்கிக் கொண்டிருக்க, மற்றவர்கள் காப்பாற்ற முயன்றுள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 9வது முறையாக நீட்டிப்பு!
இதனால் அடுத்தடுத்து, ஐந்து மாணவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர். மற்ற ஐந்து மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள், இது குறித்து தீயணைப்பு மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீரில் மூழ்கி உயிரிழந்த ஐந்து பேரில், நான்கு பேரின் உடல்களை மீட்டுள்ளனர். மற்ற ஒருவரின் உடலைத் தேடி வருகின்றனர்.