Homeசெய்திகள்இந்தியாசந்திரபாபு நாயுடுவை மீண்டும் கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை!

சந்திரபாபு நாயுடுவை மீண்டும் கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை!

-

- Advertisement -

 

தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய தெலுங்கு தேசம் கட்சி!
File Photo

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை பைபர் நெட் முறைகேடு வழக்கில் கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ஆற்றில் குளித்த 5 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சியின் போது, திறன் மேம்பாட்டு திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அந்த மாநில சி.ஐ.டி. காவல்துறையினர், வழக்குப்பதிவுச் செய்தனர். முதல் தகவல் அறிக்கையில், முதல் குற்றவாளியாக முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சேர்க்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு, ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

விஜயவாடா சி.ஐ.டி. நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடு தரப்பில், தாக்கல் செய்யப்பட்ட பிணைக் கோரும் மனுக்கள் விசாரணை நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து, பொய் வழக்கில் சந்திரபாபு நாயுடுவை கைது செய்துள்ளதாகவும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவரது உயிருக்கு சிறையில் ஆபத்து இருப்பதாகவும் தெலுங்கு தேசம் கட்சியினர், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான மாநில அரசு மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.

பங்காரு அடிகளார் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

சந்திரபாபு நாயுடுவுக்கு பிணை வழங்கக்கோரும் மனு உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், அவர் மீது பைபர் நெட் முறைகேடு வழக்கு பதிவுச் செய்யப்பட்டு கைது செய்ய, ஆந்திர காவல்துறையினர் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

பிணைக் கோரும் பிந்தைய வழக்கில் நிலுவையில் இருப்பதால், பைபர் நெட் வழக்கில் சந்திரபாபு நாயுடுவைக் கைது செய்யக் கூடாது என ஆந்திர மாநில காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MUST READ