சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசப்புரத்தில் உள்ள அடையாறு முகத்துவாரத்தில் உள்ள குப்பைகளை அகற்றிய சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்.
திடக்கழிவு மேலான்மையின் ஒரு பகுதியாக சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் குப்பைகளை அகற்றும் பணிகள் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. ஆணையர் ராதாகிருஷ்ணன் குப்பைகறை அகற்றும் பணிகளில் ஈடுபட்டார். தொடர்ந்து பேட்டியளித்த அவர், ஒவ்வொரு பகுதிகளிலும் வாரம் 2முறை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறுகிறது. குப்பைகள் அதிகம் கொட்டும் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளாக செடிகள் நடுவது போன்ற பணிகள் மூலம் கட்டுப்படுத்தப்பட உள்ளது.
தினசரி ஒரு நபர் 700 கிராம் குப்பைகள் கொட்டுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. அவற்றை, காலி இடங்களில், பொது இடங்களில் குப்பைகளை கொட்ட கூடாது என மக்களுக்கு விழிப்புணர்வு தேவையாகிறது. மேலும், மழைநீர் காழ்வாய்களிலோ, கழிவு நீர் கால்வாய்களிலோ குப்பைகளை கொட்டினால் மழை பெய்யும் காலத்தில் மழை நீர் வெளியேராமல், வெள்ளப்பெருக்கு பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னையில் உள்ள நீர் தேக்க பகுதிகள், குளங்கள், குட்டைகளில் ஆகாயத்தாமரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. மழைநீர் வடிகால் பணிகள் பெரும்பாலும் முடிக்கப்பட்டுள்ளது. 40 இடங்களில் மட்டுமே பணிகள் முடிக்க முடியாமல் உள்ளது. அங்கு வேறு துறைகள் சார்ந்த பணிகள் நடைபெறுவதால் பணிகள் தாமதமாகிறது. நடப்பாண்டில் மட்டும் 170 கிமீ பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க உத்தரவும், மாட்டு உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், மாநகராட்சி அதிகாரிகளின் வாகனம் வரும் போது, மாட்டின் உரிமையாளர்கள் மாட்டினை கட்டிப்போடுகினறனர். அப்படி இருக்கும் நபர்களையும், கண்காணிப்பு காமிரா மூலம் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை 1886 தெருவில் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு, 127உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல தெருநாய்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறினார்.
சென்னையில் காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், சிக்கன் குனியா கட்டுப்பாட்டில் உள்ளது, 21 பேர் சிக்கன் குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால், மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் எனவும் மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தினார்.