விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் முன்னோட்டம் வரும் 24-ம் தேதி வௌியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ரிலீஸ் ஆகாமல் நீண்ட நாள் நிலுவையில் உள்ளது. இதனை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இதில் விக்ரமுடன் இணைந்து ராதிகா சரத்குமார்,ரித்து வர்மா, சிம்ரன், விநாயகன், திவ்யதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. விக்ரம் இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். ஒன்றாக என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.
துருவ நட்சத்திரம் திரைப்படம் வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஆக்சன் காட்சிகள் நிறைந்த மிரட்டலான வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், படத்தின் முன்னோட்டம் வரும் 24-ம் தேதி வௌியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும், திரையரங்குகளிலும் திரையிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.