Homeசெய்திகள்ஆவடிதிருமுல்லைவாயல் விவேகானந்தா நகரில் சுகாதாரமற்ற பூங்கா-அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என புகார்

திருமுல்லைவாயல் விவேகானந்தா நகரில் சுகாதாரமற்ற பூங்கா-அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என புகார்

-

- Advertisement -

ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் விவேகானந்தா நகரில் சுகாதாரமற்ற பூங்கா தொற்றுநோய் பரவும் அபாயம்

திருமுல்லைவாயல் விவேகானந்தா நகர் பகுதியில் சாலையில் சுகாதார சீர்கேடு முறையில் கால்வாய் நீர்கள் தேங்கி நிற்பதாகவும், குப்பைகள் எப்பொழுதும் எரிந்து சுடுகாடு போல காட்சியளிப்பதாகவும், இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், சுகாதார சீர்கேடு உள்ள இப்பகுதியை மாநகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டு சீரமைக்க வேண்டும் என புகார்.

திருமுல்லைவாயல் விவேகானந்தா நகரில் சுகாதாரமற்ற பூங்கா-அதிகாரிகள் பார்வையிட்டு சீரமைக்க வேண்டும் என புகார்ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் விவேகானந்தா நகர் குடியிருப்பு பகுதி உள்ளது.இங்கு சுமார் 1000திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த இடத்தினை ஓரகடம் சொசைட்டி பூங்கா,நூலகம் என அனைத்தும் உருவாக்கி உள்ளது.

இது குறித்து விவேகானந்தா நல சங்க செயலாளர் கணேசன் கூறுகையில், இந்த விவேகானந்தா நகர் ஆவடி மாநகராட்சி எல்லைக்குட்பட்டது இந்த விவேகானந்தா நகரை ஒரகடம் சொசைட்டி உருவாக்கி இதில் குடியிருப்பு வாசிகள் 1000திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.அடிப்படை வசதி இல்லாமல் இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

திருமுல்லைவாயல் விவேகானந்தா நகரில் சுகாதாரமற்ற பூங்கா-அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என புகார்இந்நிலையில் இங்கு பூங்கா சுகாதார சீர்கேடு நிலையிலும் எங்கு பார்த்தாலும், கழிவுநீர் தேங்கியும், குப்பைகள் எப்பொழுதும் எரிந்து கொண்டே சுடுகாடு போல காட்சி அளிக்கிறது. இந்த புகையினால் இவ்வழியாக செல்லும் குழந்தைகள் பெரியோர்கள் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.இந்த சுகாதாரமற்ற நிலையை ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் சீர் செய்து தரும்படி கேட்டுக் கொண்டார்.மேலும் சுகாதார சீர்கேடு நிறைந்த பூங்காவை சீரமைத்து அதனைத் தொடர்ந்து பாதுகாத்து பராமரிக்க பணியாட்களை நியமித்து,எப்பொழுதும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

MUST READ