சிவகார்த்திகேயன், தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் .மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
அதைத் தொடர்ந்து தனது 21வது படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு காஷ்மீர் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜி வி பிரகாஷ் இசையிலும் இப்படம் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயன் SK21-ல் ராணுவ அதிகாரியாக நடித்து வருகிறார்.
தற்போது காஷ்மீர் பகுதிகளில் நடைபெற்று வந்த இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தெரியவந்துள்ளது. காஷ்மீரில் மட்டும் இரண்டு மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடைபெற்றது. மேலும் இப்படம் போர் சம்பந்தமான கதை களத்தில் தயாராகி வருகிறது. சிவகார்த்திகேயன் இதில் புதிய பரிமாணத்தில் தோன்றுவார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன், தனது தயாரிப்பு நிறுவன கம்பெனியில் ஆயுத பூஜை கொண்டாடி உள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.