தமிழக மக்களால் தேர்வுச் செய்யப்பட்ட அரசுக்கு எதிராகவும், தமிழக மக்களின் உணர்வுக்கு எதிராகவும் ஆளுநர் பேசி வருவது அரசியல் சாசனத்திற்கு செய்யும் துரோகம் என்று தி.மு.க.வின் பொருளாளர் டி.ஆர்.பாலு குற்றஞ்சாட்டியுள்ளார்.
தீபாவளி பண்டிகை – பட்டாசு கடைகளுக்கு கடும் கட்டுப்பாடு!
இது தொடர்பாக, தி.மு.க.வின் மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் விலக்கு உள்ளிட்ட ஆவணங்களில் கையொப்பம் இடும் பொறுப்பை நிறைவேற்றாமல் அரசியல்வாதி போல ஆளுநர் செயல்படுகிறார். விடுதலைப் போராட்ட வீரர்கள் தமிழக அரசு செய்த எந்த ஒரு திட்டத்தையும் அறியாமல் ஆளுநர் பொய்களைக் கட்டவிழ்த்து வருகிறார்.
டெல்லி குடியரசுத் தினத்தில் தமிழக போராட்ட வீரர்களின் சிலைகள் இடம் பெற்றிருந்த வாகனத்திற்கு மத்திய அரசு அனுமதி மறுத்தபோது எங்கு போனார் ஆளுநர்? ஆளுநரின் அடிவயிற்றில் திராவிடம் என்ற சொல் எரிச்சலாக இருப்பதால் தான், திராவிட மொழியின் ஒப்பிலக்கணத்தை எழுதிய ராபர்ட் கால்டுவெல் அதிகம் படிக்காதவர் எனக் கூறினார்.
இயல்பு நிலைக்கு திரும்பிய ஆவடி ரயில் நிலையம்
தமிழக மக்களின் வரிப் பணத்தில் ஊர் சுற்றி, அந்த மக்களுக்கே துரோகம் செய்வதை கைவிட வேண்டும் ; இல்லையென்றால் ஆளுநர் பதவியை விட்டு விலகி பா.ஜ.க. தலைவராகவோ, ஆர்.எஸ்.எஸ். தலைவராகவோ மாறலாம்” என்றும் விமர்சித்துள்ளார்.