Homeசெய்திகள்இந்தியா"சந்திரபாபு நாயுடுவின் மனைவி நடத்தும் பேருந்து யாத்திரை குறித்து அமைச்சர் ரோஜா விமர்சனம்"!

“சந்திரபாபு நாயுடுவின் மனைவி நடத்தும் பேருந்து யாத்திரை குறித்து அமைச்சர் ரோஜா விமர்சனம்”!

-

 

"சந்திரபாபு நாயுடுவின் மனைவி நடத்தும் பேருந்து யாத்திரை குறித்து அமைச்சர் ரோஜா விமர்சனம்"!
File Photo

சந்திரபாபு நாயுடுவின் மனைவி மற்றும் மருமகள் நடத்தும் பேருந்து யாத்திரையால் உண்மை வெற்றியடைந்தால், சந்திரபாபு நாயுடு நிரந்தரமாகவே சிறையில் இருக்க நேரிடும் என ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் பேச்சுக்கு டி.ஆர்.பாலு கண்டனம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர், அமைச்சர் ரோஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “சந்திரபாபுவின் மனைவி, இப்போது கொஞ்சம் முன்பு தான் வழிபடச் சென்றார். உண்மை வெல்ல வேண்டுமென வழிபடுவதாகக் கூறுகின்றனர். நாங்களும் உண்மை வெல்ல வேண்டும் என்பதை தான் சொல்கிறோம்.

ஆயுத பூஜை சிறப்பு- கடவுளுக்கு தீபம் காட்டும் இயந்திரம்

உண்மை வென்றால், வாழ்க்கை முழுவதும் சந்திரபாபு நாயுடு சிறையிலேயே இருப்பார். அவருடன் அவரது மகனும் சிறையில் இருக்க வாய்ப்பு உள்ளது. புவனேஸ்வரி அம்மையார், சி.பி.ஐ. விசாரணை கோரி உண்மையை வெளிக்கொண்டு வரலாம். வருகின்ற ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் அனுதாபம், மக்களிடையே எடுபடாது என்றும், மீண்டும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆட்சி அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ