திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா, முகூர்த்தக்கால் நடும் வைபவத்துடன் தொடங்கியது.
“சொல்லிக் கொடுத்ததை அப்படியே ஆளுநர் பேசியுள்ளார்”- திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி!
பூலோகம் வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா, முகூர்த்தக்கால் நடும் வைபவத்துடன் தொடங்கியது. கோயிலின் இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் ஆயிரம் கால் மண்டபத்தில் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், முகூர்த்தக்கால் நடப்பட்டது.
வரும் டிசம்பர் 12- ஆம் தேதி தொடங்கும் வைகுண்ட ஏகாதசி விழா, பகல்பத்து திருவிழாவின் 10-வது நாளான மோஹினி அலங்காரம் வரும் டிசம்பர் 22- ஆம் தேதியும், ராபத்து திருவிழாவின் வைகுந்த ஏகாதசி எனப்படும் பரமபத வாசல் திறப்பு, வரும் டிசம்பர் 23- ஆம் தேதி அதிகாலை 04.00 மணிக்கும் நடைபெறுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நவராத்திரி விழா…. திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்பு!
விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.