ஒரு மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கிய நடிகை பூஜா ஹெக்டே, தமிழில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து அவருக்கு தமிழில் அதிக வாய்ப்புகள் வரவில்லை. இதனால், தெலுங்கு மற்றும் பாலிவுட் பக்கம் அவர் சென்றார். இந்தியில் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.
இதனிடையே, தெலுங்கில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக அலவைக்குந்தபுரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. அதைத் தொடர்ந்து அவருக்கு தமிழில் விஜய்யுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைந்தது. அதன்படி பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து விஜயின் பீஸ்ட் படத்திலும் நடித்துள்ளார்.
தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் சமீபத்தில் சல்மான்கான் திருமணம் செய்யப் போவதாக வதந்திகள் பரவி வந்தது. ஒரு கட்டத்தில் பூஜா ஹெக்டே இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே 4 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது தொடர்பாகன புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.