Homeசெய்திகள்உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகள் வேலைகளில் இடஒதுக்கீடு, டிரைவிங் லைசென்ஸ் கேட்டு போராட்டம்

உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகள் வேலைகளில் இடஒதுக்கீடு, டிரைவிங் லைசென்ஸ் கேட்டு போராட்டம்

-

- Advertisement -

உயரம் குறைந்தோர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உயரம் குறைந்தவர்கள் அனைவரும் மருத்துவ சான்றிதழ் பெற்று 3 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் வழங்குதல், அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட  வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-

உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகள் வேலைகளில் இடஒதுக்கீடு, டிரைவிங் லைசென்ஸ் கேட்டு போராட்டம்

மாற்றுத்திறனாளிகளின் 18 கோரிக்கைகளையும் தமிழக அரசு பரிசீலினை செய்து ஒரு காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற வேண்டும். வாய்ப்பு இருக்கும் துறைகளில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கினால் அவர்களது வாழ்வு மேம்படும்.

தனியார் நிறுவனங்கள், மனிதாபிமான அடிப்படையில் உயரம் குறைவான மாற்று திறனாளிகளுக்கு வேலை வழங்குவதற்கு அரசு பரிந்துரை செய்ய வேண்டும். இலவச வீடு வழங்கும் திட்டத்தில் இவர்களுக்கு வீடு வழங்க சிறப்பு அரசாணையை வழங்க வேண்டும். இவர்களது உயரம் தான் குறைவாக உள்ளது. ஆனால் இவர்களது செயல்பாடு நிறைவாகவே இருக்கும். எனவே, இவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

 

MUST READ