இரண்டு நாள் பயணமாக நேற்று (அக்.26) இரவு 08.00 மணிக்கு தனி விமானம் மூலம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்னைக்கு வந்தார். சென்னை விமான நிலையத்திற்கு வந்த குடியரசுத் தலைவருக்கு பொன்னாடை மற்றும் ‘மணிமேகலை’ காப்பியத்தின் ஆங்கில பதிப்பு புத்தகம் வழங்கி வரவேற்றார்.
வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்!
அதைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப., தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் இ.ஆ.ப. உள்ளிட்டோர் குடியரசுத் தலைவரை வரவேற்றனர்.
பின்னர், கார் மூலம் கிண்டியில் உள்ள ராஜ் பவனுக்கு சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஓய்வெடுத்தார். அதைத் தொடர்ந்து, இன்று (அக்.27) காலை ராஜ் பவனில் முக்கிய பிரமுகர்களைச் சந்திக்கும் குடியரசுத் தலைவர், சென்னை உத்தண்டில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கவுள்ளார்.
காவலரைத் தாக்கிய வட மாநிலத்தவர் 5 பேர் கைது!
அதைத் தொடர்ந்து, மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தனி விமானம் மூலம் டெல்லிக்கு செல்கிறார்.