மக்களவைத் தேர்தல் முடியும் வரை ஆளுநரை மாற்றிவிட வேண்டாம் என கோரிக்கை வைக்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம்’- மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
சென்னையில் தி.மு.க. வழக்கறிஞர் புருஷோத்தம் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பெரிய மாளிகையில் அமர்ந்து கொண்டு திராவிடம் என்றால் என்ன என சிலர் கேட்கின்றனர். திராவிடம் என்றால் என்ன எனக் கேட்கிறார்களே அவர்களின் பதவியே வேஸ்ட் தான். திராவிடம் என்றால் என்ன என கேட்க வைத்திருப்பது தான் திராவிடம்.
தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 40 உயர்வு!
மக்களவைத் தேர்தல் முடியும் வரை ஆளுநரை மாற்றி விட வேண்டாம் என கோரிக்கை வைக்கிறேன். ஆளுநரை மாற்ற வேண்டாம் என பிரதமருக்கும், மத்திய உள்துறை அமைச்சருக்கும் கோரிக்கை வைக்கிறேன். தி.மு.க. ஆட்சியில் தான் அதிகளவில் சீர்திருத்த திருமணங்கள் நடைபெற்றன” எனத் தெரிவித்துள்ளார்.