Homeசெய்திகள்தமிழ்நாடுகருக்கா வினோத்தைக் காவலில் எடுத்து விசாரிக்க கிண்டி காவல்துறை முடிவு!

கருக்கா வினோத்தைக் காவலில் எடுத்து விசாரிக்க கிண்டி காவல்துறை முடிவு!

-

- Advertisement -
kadalkanni

 

கருக்கா வினோத்தைக் காவலில் எடுத்து விசாரிக்க கிண்டி காவல்துறை முடிவு!
File Photo

கிண்டியில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரணை செய்வதற்காக, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

“இந்திய துறைமுகங்களில் கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பது அவசியம்”- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேச்சு!

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவன் முகப்பு வாயிலில் கடந்த அக்டோபர் 25- ஆம் தேதி அன்று கருக்கா வினோத் என்பவர், பெட்ரோல் குண்டை வீசிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உடனடியாக கருக்கா வினோத்தைக் கைது செய்த காவல்துறையினர், ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர்.

மேலும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க, கிண்டி காவல்துறையினர் முடிவுச் செய்துள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜின் இசை நிகழ்ச்சிக்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் அனுமதி!

அவரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு சைதாப்பேட்டை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ