லஞ்ச ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் கல்லூரி மாணவர்கள் வைத்து மேற்கொண்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சென்னை பூவிருந்தவல்லி அருகே இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் தனியார் கலை கல்லூரி இணைந்து லஞ்ச ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிளத்தான் எனும் சைக்கிள் பேரணி நடத்தினர். எஸ் ஏ கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த சைக்கிள் பேரணியை இந்தியன் ஆயில் முதன்மை பொது மேலாளர் வெற்றி செல்வகுமார் துவக்கி வைத்தார்.
ஊழலுக்கு எதிராக செயல்படுங்கள், தேசிய கடமையாற்றுங்கள், ஊழலில்லா இந்தியாவை கட்டமைக்க வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் சைக்கிள் பேரணி சென்றனர். லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பூந்தமல்லி அருகே வீரராகவபுரத்தில் துவங்கிய பேரணி ஆவடி சென்று மீண்டும் கல்லூரி வந்தடைந்து 15 கிலோமீட்டர் பூர்த்தி செய்தனர்.
முன்னதாக ஊழலுக்கு எதிராக உறுதிமொழி ஏற்று பேரணியை துவக்கினர். இதில் இதில் மேலாளர் சுரேஷ்குமார் மற்றும் கல்லூரி மாலதி செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.